/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை
/
உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை
ADDED : செப் 22, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:மகாளய அமாவாசையை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில் நேற்று காய்கறி விற்பனை அமோகமாக நடந்தது. 339 டன் காய்கறி மூலம், 1.34 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
அதில் தாதகாப்பட்டி சந்தைக்கு, அதிகபட்சமாக, 55 டன் காய்கறி, பழங்கள் கொண்டு வரப்பட்டு, 24.35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. குறைந்தபட்சமாக ஆட்டையாம்பட்டி சந்தைக்கு, 5 டன் காய்கறி மூலம், 1.83 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.