/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரூர் - ஈரோடு இடையே சில ரயில் இயக்கம் ரத்து
/
கரூர் - ஈரோடு இடையே சில ரயில் இயக்கம் ரத்து
ADDED : மார் 15, 2026 07:58 AM
சேலம்:ஈரோடு
- கரூர் தடத்தில் உள்ள மூர்த்திபாளையம் ரயில்வே ஸ்டேஷனில்
பராமரிப்பு, பொறியியல் பணிகள் நடக்க உள்ளன.
இதனால் மார்ச் 16(நாளை)
காலை, 7:25க்கு புறப்படும், திருச்சி - ஈரோடு பயணியர் ரயில், கரூர் வரை
இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படும். அன்று
அதிகாலை, 5:20க்கு கிளம்பும், செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ்
கரூருடன் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின், முன்பதிவில்லா
சிறப்பு ரயிலாக ஈரோடு வரை இயக்கப்படும்.
அன்று மதியம், 2:00 மணிக்கு
புறப்பட வேண்டிய ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மதியம், 3:05க்கு
கரூரில் இருந்து கிளம்பும். ஈரோடு முதல் கரூர் வரை ரத்து செய்யப்படும்.
மதியம், 1:00 மணிக்கு கிளம்பும் திருச்சி - பாலக்காடு ரயில் கரூர் வரை
இயக்கப்படும். பணிகள் முடிந்த பின், முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக,
பாலக்காடு வரை இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளது.

