/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் மகன், மகளை கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை
/
சேலத்தில் மகன், மகளை கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை
சேலத்தில் மகன், மகளை கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை
சேலத்தில் மகன், மகளை கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை
ADDED : அக் 18, 2024 07:21 AM
சேலம்: சேலத்தில் போலீஸ் ஏட்டு மனைவி, குழந்தைகள் இருவரை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு கோவிந்தன், 38; இவரின் மனைவி சங்கீதா, 34; தம்பதியரின் மகன் ரோகித், 7, மூன்றாம் வகுப்பு மாணவன். மகள் சர்ஷிகாஸ்ரீ, 3, எல்.கே.ஜி., மாணவி. கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் குடியிருந்தனர்.
கோவிந்தன் நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய போது, குழந்தைகள் படுக்கையில் இறந்து கிடந்தனர். அருகில் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்து விட்டு, சங்கீதா தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரிக்கின்றனர்.