ADDED : செப் 24, 2026 01:33 AM

அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர், கருமலைக்கூடல் போலீசார், நேற்று மதியம், அஜய்-நகர், 4 ரோடில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த செல்லப்பன் தெருவை சேர்ந்த ரவுடி பிரகாஷ், 25 என்பவர், 'என்னை கண்டு மற்றவர்கள் பயப்பட வேண்டும். அதற்கு வாக-னங்கள், பொதுச்சொத்துகளை
சேதப்படுத்த வேண்டும்' என பேசினார்.
போலீசார் எச்சரித்தும், அங்கிருந்து செல்லாமல் இருந்த பிரகாைஷ, போலீசார் கைது செய்தனர். பிரகாஷ் மீது கரும-லைக்கூடல், பூலாம்பட்டி ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன. அதேபோல் ஓமலுார், அமரகுந்தி கஸ்பா பகுதியை சேர்ந்த ரவுடி திருநாவுக்கரசு, 29. நேற்று காலை, அமரகுந்தி ஈஸ்வரன் கோவில் அருகே பேசினார். அவரை, தொளசம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
