ADDED : மே 22, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்,காடையாம்பட்டி, கூக்குட்டப்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி, 70. நேற்று முன்தினம், மாடு மேய்க்க, வீடு அருகே வனப்பகுதிக்கு சென்றபோது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த மூக்குத்தி, தோடு திருடுபோயிருந்தது.
ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று சேலம் எஸ்.பி., கண்ணன் (பொ), கூக்குட்டப்பட்டி, அதை சுற்றி உள்ள பகுதிகளில் விசாரித்தார். மாலையில் பொட்டியபுரத்தில் விசாரித்தார்.