தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


ADDED : ஏப் 06, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: ஈஸ்டர் திருநாளை ஒட்டி, கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் தவக்கா-லத்தை கடைப்பிடித்தனர். அதன் நிறைவு வாரம், புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதை ஒட்டி கடந்த மார்ச், 29ல் குருத்தோலை ஞாயிறு ஊர்-வலம், ஏப்., 2ல், பெரிய வியாழன் அன்று சீடர்களின் பாதங்-களை கழுவும் சடங்கு நடத்தப்பட்டது. புனித வெள்ளியான, 3ல், இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து,

சிலுவைப்பாதை ஊர்வலம், சிறப்பு

பிரார்த்தனை நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த, ஈஸ்டர் சண்டே திருநாளை ஒட்டி, சேலம், 4 ரோடு அருகே உள்ள, குழந்தை இயேசு பேராலயத்தில் நேற்று காலை, பங்குத்தந்தை ஜெய் பெர்னார்ட் ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்-தது. அதில் ஏராளமானோர், இயேசு பாடல்களை பாடி பிரார்த்-தனை செய்தனர்.

கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் உதவி போதகர்கள் சத்யராஜ், சாமுவேல்; கோட்டை சி.எஸ்.ஐ., லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின்; அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயத்தில் ஆயர் பிரடெரிக் தாணு பிள்ளை தலைமையில் பிரார்த்தனை நடந்தது.

ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்டி புனித ராயப்பர் சின்னப்பர் தேவா-லயத்தில் பங்குத்தந்தை ஜோசப்பவுல்ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதேபோல் சேலம், அழகாபுரம் புனித மிக்கெல் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us