தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


ADDED : ஏப் 06, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 05:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:ஈஸ்டர் திருநாளை ஒட்டி, கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் தவக்காலத்தை கடைப்பிடித்தனர். அதன் நிறைவு வாரம், புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதை ஒட்டி கடந்த மார்ச், 29ல் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம், ஏப்., 2ல், பெரிய வியாழன் அன்று சீடர்களின் பாதங்களை கழுவும் சடங்கு நடத்தப்பட்டது. புனித வெள்ளியான, 3ல், இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து, சிலுவைப்பாதை ஊர்வலம், சிறப்பு

பிரார்த்தனை நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த, ஈஸ்டர் சண்டே திருநாளை ஒட்டி, சேலம், 4 ரோடு அருகே உள்ள, குழந்தை இயேசு பேராலயத்தில் நேற்று காலை, பங்குத்தந்தை ஜெய் பெர்னார்ட் ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதில் ஏராளமானோர், இயேசு பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர்.

கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் உதவி போதகர்கள் சத்யராஜ், சாமுவேல்; கோட்டை சி.எஸ்.ஐ., லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின்; அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயத்தில் ஆயர் பிரடெரிக் தாணு பிள்ளை தலைமையில் பிரார்த்தனை நடந்தது.

ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்டி புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜோசப்பவுல்ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதேபோல் சேலம், அழகாபுரம் புனித மிக்கெல் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us