/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால பைரவருக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்
/
கால பைரவருக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்
கால பைரவருக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்
கால பைரவருக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 24, 2024 02:06 AM
வீரபாண்டி, டிச. 24-
தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு நடந்த சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆட்டையாம்பட்டி, எட்டுப்
பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கால பைரவருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபி ேஷகம் செய்து செவ்வரளி, சிவப்பு ரோஜா மாலை மற்றும் சிவப்பு வஸ்திரம் சார்த்தி அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.தேய்பிறை அஷ்டமியில், கால பைரவரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் ஆட்டையாம்பட்டி கை.புதுார் ராஜகணபதி கோவிலில் உள்ள கால பைரவருக்கு மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி நடந்த சிறப்பு அபி ேஷக, அலங்கார பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இளம்பிள்ளை, பாலசுப்பிரமணியசுவாமி கோவில் சம்ஹார கால பைரவருக்கு, பலவித மங்கல பொருட்களால் அபிேஷகம் செய்து சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கிராதேவி மற்றும் ஸ்வர்ண பைரவருக்கு, நேற்று தேய்பிறை அஷ்டமியொட்டி சிறப்பு பூஜை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி, ஸ்வர்ண பைரவர் அருள்பாலித்தனர். முன்னதாக, உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது.
* தலைவாசல் அருகே, ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் கால பைரவருக்கு பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகையான அபி ேஷக பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார். வீரகனுார் கங்கா சவுந்தரேஸ்வரர், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.