/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
/
சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : நவ 09, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவனந்தபுரம் - பெங்களூரு சிறப்பு ரயில், வரும், 12 முதல், ஜன., 28 வரை, செவ்வாய்தோறும் மாலை, 6:05க்கு புறப்பட்டு போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே மறுநாள் காலை, 10:55க்கு பெங்களூருவை அடையும். சேலத்-துக்கு அதிகாலை, 5:07க்கு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், நவ., 13 முதல், ஜன., 29 வரை, புதன்தோறும் மதியம், 12:45க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 6:45க்கு திருவனந்தபு-ரத்தை அடையும். சேலத்துக்கு மாலை, 4:57க்கு வந்து செல்லும்.