/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு
/
சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : நவ 14, 2024 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சபரிமலை சீசனை முன்னிட்டு, கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - கேரள மாநிலம் கோட்டயம் இடையே, வார சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: வரும், 19 முதல் ஜன., 14 வரை, செவ்வாய்தோறும் மதியம், 3:15க்கு, ஹூப்ளியில் புறப்படும் ரயில், மறுநாள் மதியம், 12:00 மணிக்கு கோட்டயத்தை அடையும். இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே செல்லும். மறுமார்க்க ரயில், வரும், 20 முதல் ஜன., 15 வரை புதன்தோறும் மதியம், 3:00 மணிக்கு கோட்டயத்தில் புறப்பட்டு மறுநாள் மதியம், 12:50 மணிக்கு ஹூப்ளியை
அடையும்.

