ADDED : ஏப் 07, 2026 02:19 AM
சேலம் சேலம் வழியே, பீகார் மாநிலத்துக்கு எர்ணாகுளம்-முஸாபர்பூர் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம்-முஸாபர்பூர் சிறப்பு வார ரயில், ஏப்., 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 9:10 மணிக்கு கிளம்பி திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடுர், நெல்லுார் வழியே திங்கட்கிழமை காலை 7:30 மணிக்கு, பீகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் சென்றடையும். ஈரோடுக்கு சனிக்கிழமை அதிகாலை 4:05 மணிக்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 5:07 மணிக்கும் வந்து செல்லும்.
மறு மார்க்க ரயிலான முஸாபர்பூர்-எர்ணாகுளம் சிறப்பு வார ரயில், ஏப்., 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு, 9:15 மணிக்கு கிளம்பி, வியாழக்கிழமை காலை 10:45 க்கு எர்ணாகுளம் சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு புதன் இரவு 11:10க்கும், ஈரோடுக்கு 12:15க்கும் வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது
