ADDED : மார் 08, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில் வரும், 10, 24 மாலை, 5:45க்கு புறப்பட்டு போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே, அடுத்தநாள் மதியம், 12:10க்கு சென்னையை அடையும். ஈரோட்டுக்கு அடுத்தநாள் அதிகாலை, 5:40க்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 6:47க்கும் வந்து செல்லும்.
மறுமார்க்க ரயில், வரும், 11, 25 மதியம், 3:10க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 8:30க்கு நாகர்கோவிலை அடையும். சேலத்துக்கு இரவு, 7:47க்கும், ஈரோட்டுக்கு, 8:45க்கும் வந்து செல்லும்.

