/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளி பண்டிகைக்காக சேலம் வழியே சிறப்பு ரயில்கள்
/
தீபாவளி பண்டிகைக்காக சேலம் வழியே சிறப்பு ரயில்கள்
ADDED : அக் 14, 2025 07:32 AM
சேலம்: தீபாவளி விடுமுறையில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, சேலம் வழியே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூரு - துாத்துக்குடி சிறப்பு ரயில், அக்., 17, 21ல், இரவு 8:00 மணிக்கு கிளம்பி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி வழியே மறுநாள், 11:00 மணிக்கு துாத்துக்குடி சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு அதிகாலை, 3:30 மணி, நாமக்கல் 4:40, கரூர் 5:30 மணிக்கு வந்து செல்லும்.மறு மார்க்கத்தில், துாத்துக்குடி - பெங்களூரு சிறப்பு ரயில், அக்., 18, 22 தேதிகளில் மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கரூருக்கு இரவு 8:15 மணி, நாமக்கல் 8:50, சேலம் 10:05க்கு வந்து செல்லும்.பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரயில், அக்., 16 மதியம் 3:00 மணிக்கு கிளம்பி பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு வழியே மறுநாள் காலை, 6:20 மணிக்கு கொல்லம் சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு இரவு 7:40, ஈரோடு 8:45 மணிக்கு வந்து செல்லும்.மறு மார்க்கத்தில் கொல்லம் - பெங்களூரு சிறப்பு ரயில், அக்., 17 இரவு, 10:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். ஈரோடு இரவு, 8:20, சேலம் 9:20 மணிக்கு வந்து செல்லும்.
பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயில், அக்., 21, இரவு 11:00 மணிக்கு கிளம்பி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் மதியம், 12:55 மணிக்கு கொல்லம் சென்ற-டையும். சேலத்துக்கு அதிகாலை, 3:07, ஈரோடுக்கு 4:05 மணிக்கு வந்து செல்லும்.கொல்லம்-பெங்களூரு சிறப்பு ரயில், அக்., 22, மாலை 5:00 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 9:45 மணிக்கு பெங்களூரு சென்றடையும். ஈரோடுக்கு அதிகாலை, 3:10, சேலத்துக்கு 4:05 மணிக்கு வந்து செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.