ADDED : ஏப் 03, 2026 04:16 AM
அ நிறம் | அளவு
சேலம், ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு வார ரயில், சனி இரவு, 11:10க்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே, திங்கள் காலை, 7:10க்கு கொல்லத்தை அடைகிறது. இந்த ரயில் மே, 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்க ரயில், திங்கள் காலை, 10:45க்கு கிளம்பி, அடுத்தநாள் மாலை, 5:30க்கு ஹைதராபாத்தை அடைகிறது. இந்த ரயில் மே, 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
