sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறப்பு வார ரயில்கள் நீட்டிப்பு

/

சிறப்பு வார ரயில்கள் நீட்டிப்பு

சிறப்பு வார ரயில்கள் நீட்டிப்பு

சிறப்பு வார ரயில்கள் நீட்டிப்பு


ADDED : பிப் 14, 2026 09:09 AM

Google News

ADDED : பிப் 14, 2026 09:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஹூப்ளி - கொல்லம் சிறப்பு வார ரயில், ஞாயிறு மதியம், 3:15க்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 12:55க்கு கொல்லத்தை அடைகிறது. இதன் மறுமார்க்க ரயில், திங்கள் மாலை, 5:00 மணிக்கு கிளம்பி, அடுத்தநாள் மாலை, 6:30க்கு ஹூப்ளியை அடைகிறது.

பெங்களூரு - திருவனந்தபுரம் ரயில், திங்கள் இரவு, 7:25க்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:15க்கு திருவனந்தபுரத்தை அடைகிறது. மறுமார்க்க ரயில், செவ்வாய் மதியம், 3:15க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 8:30க்கு பெங்களூருவை அடைகிறது.

பெங்களூரு - திருவனந்தபுரம் செல்லும் மற்றொரு ரயில், வெள்ளி இரவு, 10:00 மணிக்கு கிளம்பி, அடுத்தநாள் மதியம், 2:00 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைகிறது. மறுமார்க்க ரயில், ஞாயிறு மதியம், 2:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:30க்கு பெங்களூருவை அடைகிறது.

மேலும் பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு ரயில், புதன் இரவு, 7:25க்கு கிளம்பி, அடுத்தநாள் மதியம், 1:15க்கு திருவனந்தபுரம் வடக்கை அடைகிறது. மறுமார்க்க ரயில், வியாழன் மதியம், 3:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:30க்கு பெங்களூருவை அடைகிறது. சேலம் வழியே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும், பிப்ரவரி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சேவையில் மாற்றம்ஈரோடு - கரூர் தடத்தில் ரயில்வே பாலம் கட்டுவது குறித்த பொறியியல் பணி நடக்கிறது. அப்பணியை எளிதாக்க, அந்த வழியே செல்லும் ரயில்களில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும், 16, 19, 23, 26 காலை, 7:25க்கு புறப்படும், திருச்சி - ஈரோடு பயணியர் ரயில், கரூர் ஜங்ஷன் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.

அதே நாட்களில் அதிகாலை, 5:20க்கு கிளம்பும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், கரூர் ஜங்ஷன் வரை மட்டும் இயக்கப்படும். பணி நிறைவடைந்த பின், முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக ஈரோடு வரை இயக்கப்படும். ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மதியம் 3:05க்கு கரூரில் கிளம்பி, செங்கோட்டை செல்லும். ஈரோடு முதல் கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us