/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை தாதகாப்பட்டியில் ஆன்மிக சொற்பொழிவு
/
நாளை தாதகாப்பட்டியில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED : ஆக 03, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், காளியம்மன் பண்டிகையை முன்னிட்டு, தாதகாப்பட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, யோகா மற்றும் ஆன்மிக கல்வி மையம் சார்பில், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நாளை மாலை, 6:00 முதல், இரவு, 7:.30 மணி வரை, கோவில் வளாகத்தில் நடக்க உள்ளது.
அதில் சொற்பொழிவாளர் ஸ்ரீதரன், 'மன மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்குமிடம் எங்கே? எவ்வாறு' என்ற தலைப்பில் பேசுவார். மேலும் தலைமை, முதுநிலை வழக்கறிஞர் பொன்முடி, நிர்வாக அறங்காவலர் சண்முகம், பொருளாளர் சம்பத், பேராசிரியர் சவுந்திரராஜன், மன்ற நிர்வாகி பழனிசாமி, பேராசிரியர் பரமசிவம், மாதேஸ்வரி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.