தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் கோலாகலம்

ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் கோலாகலம்

ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் கோலாகலம்


ADDED : ஜன 11, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம், சோனா கல்விக்குழுமம் சார்பில், சேலம் சோனா கல்வி நிறுவன வளாகத்தில், ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. திருமலையில் உள்ள உற்சவ மூர்த்திகளான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை முதல், பக்தர்கள் தரிசனம் செய்தனர். 10:45 மணிக்கு, சேலம் ஜங்ஷன் சுப்ரமணியர் கோவிலில் இருந்து, வள்ளியப்பா அரங்கம் வரை, சுவாமிக்கு சீர்வரிசை திருவீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பஜனை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மாலையில் பெருமாளுக்கு பட்டாடை உடுத்தி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு கல்யாணபட்டு அணிவிக்கப்பட்டு, வேத மந்திரம் முழங்க, 'கோவிந்தா' கோஷத்துடன், திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. ஸ்ரீநிவாச திருக்கல்யாண கமிட்டி தலைவர் வள்ளியப்பா, உப தலைவர்கள் அர்த்தனாரி, அப்புசாமி, ரவிச்சந்திரன், பழனிசாமி, செயலர் கார்த்-திகேயன், பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர், விழா ஏற்பாடு-களை செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us