/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ், கேக்ஸ்:சேலத்தில் நாளை திறப்பு விழா
/
எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ், கேக்ஸ்:சேலத்தில் நாளை திறப்பு விழா
எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ், கேக்ஸ்:சேலத்தில் நாளை திறப்பு விழா
எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ், கேக்ஸ்:சேலத்தில் நாளை திறப்பு விழா
ADDED : அக் 01, 2025 02:07 AM
சேலம்:ஈரோடு, திரு.வி.க., சாலை, முனிசிபல் காலனியை தலைமை இடமாக கொண்டு எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அண்டு கேக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. அதன் புதிய கிளை, சேலம், கடைவீதி, கோட்டை மாரியம்மன் கோவில் எதிரே, நாளை காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள் திறக்கப்பட உள்ளது.
உரிமையாளர் மகுடீஸ்வரன் தலைமை வகிப்பார். இன்ஜினியர் ராஜா, சுடர்வண்ணன், பரணிதரன், ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் எஜிகேஷனல் சிட்டி தலைவர் பாஸ்கர், ஹரிஹர கார்த்திகேயன் முன்னிலை வகிப்பர். புது கிளையை, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, முதல் விற்பனையை தொடங்கி வைப்பார். அதை, சேலம் தி லிட்டரரி பிரஸ் மனோஜ் பெற்றுக்கொள்கிறார். நாளை முதல் வரும், 5 வரை, சிறப்பு சலுகையாக ஒரு கிலோ இனிப்பு வாங்குபவருக்கு ஒரு கிலோ காரம், அரை கிலோ இனிப்பு வாங்குபவருக்கு, அரை கிலோ காரம் இலவசமாக வழங்கப்படும்.
சிறப்பு சலுகையாக, வரும், 6 முதல், 20 வரை, மைசூர்பாகு ஒரு கிலோ, 640க்கு பதில், 500 ரூபாய்க்கு கிடைக்கும். லட்டு, பாதுஷா, ஜிலேபி, சோன்பப்டி, மிக்சர், கைமுறுக்கு ஒரு கிலோ, 440க்கு பதில், 300 ரூபாய்; காஜு கத்லி, 1,200க்கு பதில், 999 ரூபாய்க்கு வழங்கப்படும். இச்சலுகை சில இனிப்பு கார வகைகளுக்கு மட்டுமே. தீபாவளி ஸ்பெஷல் ஆர்டர்களும் வரவேற்கப்படுகின்றன என, எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் இயக்குனர் சுடர்வண்ணன் தெரிவித்தார்.