தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ், கேக்ஸ் திறப்பு

எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ், கேக்ஸ் திறப்பு

எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ், கேக்ஸ் திறப்பு


ADDED : அக் 03, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், ஈரோடு, திரு.வி.க., சாலை, முனிசிபல் காலனியை தலைமை இடமாக கொண்டு, எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அண்டு கேக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. அதன் புது கிளை, சேலம், கடைவீதி, கோட்டை மாரியம்மன் கோவில் எதிரே அமைக்கப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர் மகுடேஸ்வரன் தலைமை வகித்தார். இன்ஜினியர் ராஜா, சுடர்வண்ணன், பரணிதரன், ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் எஜிகேஷனல் சிட்டி தலைவர் பாஸ்கர், ஹரிஹர கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.

புதிய கிளையை, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மணிமேகலை, தீபா, சுபா, ஸ்வேதா, தாரணி, சுர சிந்து, சாந்தி, வசந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். முதல் விற்பனையை மணிமேகலை, இன்ஜினியர் ராஜா தொடங்கி வைக்க, தி லிட்டரரி பிரஸ் உரிமையாளர் மனோஜ் பெற்றுக்கொண்டார். இதில் கீர்த்திக்ராஜா, சமூக ஆர்வலர் மகாதேவன், ஈரோடு முத்துகுமரன் டெக்ஸ்டைல்ஸ் விஜயகுமார், ஈரோடு பகுதி செயலர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் திறப்பு விழாவையொட்டி, வரும், 5 வரை, சிறப்பு சலுகையாக ஒரு கிலோ இனிப்பு வாங்குபவருக்கு, 1 கிலோ காரம்; அரை கிலோ இனிப்பு வாங்குபவருக்கு அரை கிலோ காரம் இலவசமாக வழங்கப்படுகிறது. வரும், 6 முதல், 20 வரை, மைசூர்பாகு ஒரு கிலோ, 640க்கு பதில், 500 ரூபாய்க்கு கிடைக்கும். லட்டு, பாதுஷா, ஜிலேபி, சோன்பப்டி, மிக்சர், கை முறுக்கு ஒரு கிலோ, 440க்கு பதில், 300 ரூபாய்; காஜு கத்லி, 1,200க்கு பதில், 999 ரூபாய்க்கு வழங்கப்படும். இச்சலுகை சில இனிப்பு கார வகைகளுக்கு மட்டுமே. தீபாவளி ஸ்பெஷல் ஆர்டர்கள் வரவேற்கப்படுவதாக, எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் இயக்குனர் சுடர்வண்ணன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us