ADDED : மே 24, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மேச்சேரி, பொட்டனேரி எஸ்.ஆர்.வி., மெட்ரிக் மேல்நி-லைப்பள்ளி மாணவி தீபிகா, மாணவர் ரோசாந்த் தலா, 490 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்-றனர்.
மாணவ, மாணவியர் சபரீஷ், பவன்ஸ்ரீ, ஜெய்ரிஷி ஆகியோர் தலா, 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர். மாணவர் லிசவந்த், 486 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அத்துடன், 450 மதிப்பெண்களுக்கு மேல், 38 மாணவர்கள்; 400 மதிப்பெண்களுக்கு மேல், 60 மாணவர்கள் பெற்றனர். தமிழ், ஆங்கி-லத்தில் தலா ஒருவர், கணிதத்தில், 5 பேர், அறிவி-யலில், 4 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். இவர்களை, பள்ளி இயக்குனர்கள், நிர்வாகத்தினர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
