ADDED : மே 24, 2026 04:55 AM

மேட்டூர்; மேட்டூர், குட்டப்பட்டி யில் உள்ள, எஸ்.எஸ்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த, 84 மாணவர்களும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர். மாணவர் சஞ்சய் ராஜமாதேஷ், 490, மாணவி லக் ஷயா, 481, மாணவி கவிஸ்ரீ, 480 மதிப்பெண்களுடன், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 480க்கு மேல், 3 மாணவர்கள், 450க்கு மேல், 14 மாணவர்கள், 400க்கு மேல், 29 மாண-வர்கள் மதிப்பெண்கள் பெற்றனர்.
அறிவியலில், 100க்கு, 100 மதிப்பெண்களை, 4 மாணவர்கள் பெற்றனர். ஆங்கிலத்தில், 99 மதிப்-பெண்களை இரு மாணவர்கள், தமிழில், 98 மதிப்-பெண்களை ஒரு மாணவி, கணிதத்தில், 98 மதிப்-பெண்களை, இரு மாணவர்கள், சமூக அறிவி-யலில், 99 மதிப்பெண்களை ஒரு மாணவர் பெற்-றனர். இந்த மாணவர்களை, பள்ளி குழுமத்த-லைவர், தாளாளர், இயக்குனர்கள், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
