தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எஸ்.எஸ்.வி., மெட்ரிக் பள்ளி 'சதம்'

எஸ்.எஸ்.வி., மெட்ரிக் பள்ளி 'சதம்'

எஸ்.எஸ்.வி., மெட்ரிக் பள்ளி 'சதம்'


ADDED : மே 13, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர், குட்டப்பட்டியில் உள்ள, எஸ்.எஸ்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த, 142 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவர் ஹரிஷ், 600க்கு 585 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மவுஷித், 583, லோகநாதன், 581 மதிப்பெண் பெற்று, அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். 580க்கு மேல், 3 மாணவர்கள், 550க்கு மேல், 12 மாணவர்கள், 500க்கு மேல், 45 மாணவர்கள் பெற்றனர்.கணினி அறிவியலில், 13 பேர், கணிதத்தில், 2 பேர், உயிரியலில், ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அத்துடன், 99 மதிப்பெண்களை, ஆங்கிலத்தில், 2 பேர், தமிழில், 4 பேர், இயற்பியல், வேதியியலில் தலா ஒருவர் பெற்றுள்ளனர். இச்சாதனை மாணவர்களை, எஸ்.எஸ்.வி., பள்ளி குழுமத்தலைவர், தாளாளர், இயக்குனர்கள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us