ADDED : ஆக 16, 2026 05:55 AM
மேட்டூர்:மேட்டூர்,
புனித விண்ணேற்பு அன்னை ஆலய விழா திருப்பலி கொடியேற்றம், கடந்த, 9ல்
நடந்தது. தொடர்ந்து திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம், சேலம் மறை
மாவட்ட பொருளாளர் டேவிட் ஸ்டேன்லி குமார் தலைமையில் நவநாள் திருப்பலி
நடந்தது.
நேற்று காலை, 8:00 மணிக்கு, திருவிழா திருப்பலி, இரவு, 7:30
மணிக்கு விண்ணேற்பு அன்னை தேர்பவனி நடந்தது. தேர், சின்னபார்க்,
தினசரி சந்தை, சதுரங்காடி வழியே ஆலயத்தை அடைந்தது. ஏராளமான பங்கு
மக்கள் பங்கேற்றனர். இரவு, 9:00 மணிக்கு சேலம் கேம்ப் அருள்தந்தை
ஜான்ஜோசப் தலைமையில் நற்கருணை ஆசீர்வாத நிகழ்ச்சி நடந்தது.ஆத்துார்,
ராணிப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில், கடந்த, 6ல்,
திருப்பலி, கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று
இரவு, 8:00 மணிக்கு தேர் பவனி நடந்தது. பங்குத்தந்தை அருளப்பன்
தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியே சென்று, ஆலயத்தை அடைந்தது.
ஏராளமானோர் பங்கேற்றனர்.
