ADDED : அக் 22, 2026 01:35 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், அன்னதானப்பட்டி வேலு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 53. இவர் கடந்த, 19 இரவு வீடு முன், மாருதி ஆம்னி கார் நிறுத்தியிருந்த நிலையில் மறுநாள் காலை காணவில்லை. அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி அருகே சுடுகாட்டில் ஒரு கார் நிற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, அது ராஜேந்திரன் கார் என தெரிந்தது. காரை கைப்பற்றி, அங்கு நிறுத்தியது யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
