/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடித்துச்செல்லப்பட்ட உடைமை, கால்நடைகள்
/
அடித்துச்செல்லப்பட்ட உடைமை, கால்நடைகள்
ADDED : மே 22, 2024 06:23 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் உள்ள ஜருகுமலை, கடல் மட்டத்தில் இருந்து, 2,000 அடி உயரத்தில் உள்ளது. அங்கு மேலுார், கீழுர் கிராமங்களில், 1,200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நேற்று மதியம், 1:30 மணி முதல், அப்பகுதியில் பலத்த மழை கொட்டியதால் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
ஜருகுமலையில் மதியம், 1:30 முதல், மாலை, 5:30 மணி வரை, இதுவரையில் இல்லாதபடி பலத்த மழை கொட்டியது. விவசாய வயல், பயிர்கள் சேதமாகின. கால்நடைகள், எங்கள் உடைமைகள், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அடிவாரத்தில் இருந்து ஊருக்கு வரும் மாலைப்பாதையில், 1 முதல், 4வது கி.மீ., வரை பல இடங்களில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊருக்குள் மண் அரிப்பு, மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலுாரில் திறந்தவெளி கிணறு மழைநீரால் நிரம்பிவிட்டது. மோட்டாரும் மூழ்கி விட்டது. இதனால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்வதற்கு, மேலுாரில் இருந்து செட்டி ஊத்து வரை, தனியே ஓடை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

