ADDED : ஜூன் 17, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி:இடைப்பாடி
அருகே பக்கநாடு வி.ஏ.ஓ., சிவக்குமார், அடுவாப்பட்டியில் சோதனை நடத்தினார். அப்போது வந்த டிராக்டரை நிறுத்தும்படி, 'சைகை'
காட்டினார். அதன் டிரைவர், சற்று முன்னதாக நிறுத்திவிட்டு, இறங்கி
ஓடிவிட்டார்.
வி.ஏ.ஓ., சோதனை செய்ததில், வெள்ளை கிரானைட் கற்களை கடத்தி
வந்தது தெரிந்தது. கற்களுடன் பறிமுதல் செய்து, டிராக்டரை
பூலாம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அவர் புகார்படி,
பூலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
