/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்கள் நிறுத்தம்
/
மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்கள் நிறுத்தம்
ADDED : ஜன 13, 2025 02:28 AM
தமிழகத்தில் உள்ள, 23 மத்திய கூட்டுறவு வங்கிகளில் நிதி தட்-டுப்பாட்டால், நகை, கால்நடை வளர்ப்பு கடன்கள் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் - 205, நகர கூட்டுறவு - 5, லேம்ப் - 8, நில குடியேற்றம் - 2 என, 220 சங்கங்கள் உள்ளன. இவற்றில், 20 வகையான கடன் வழங்கப்படும் என்ற கூறினாலும், பயிர், நகை, கால்நடை வளர்ப்பு, வீட்டு அடமானம், சிறு வணிகம், டாப்செட்கோ உள்-பட, 12 வகை கடன் மட்டும் அதிகம் தருகின்றனர். இதில் நகை கடன் மட்டும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிடம் கடனாக பெற்று, 220 சங்கங்களும் உறுப்பினர்களுக்கு கொடுக்கின்றன.
ஒவ்வொரு சங்கத்துக்கும் முந்தைய ஆண்டு பெற்ற நகை கடன் அடிப்படையில், 1 கோடி முதல், 10 கோடி ரூபாய் வரை அளிக்-கப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நகை கடன் வழங்குவதை, மத்திய கூட்டுறவு வங்கி நிறுத்தி விட்-டது. இதனால் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், நகை கடன் நிறுத்தப்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பணியாளர்கள் கூறியதாவது: சங்க உறுப்பினர்கள் செலுத்தும் டிபாசிட் தொகையும், மத்திய கூட்டுறவு வங்கியின் காசுக்கடனில் தான் சேமிக்கப்படுகிறது. தற்போது அத்தொகை-யையும் விடுவிக்க தாமதம் செய்வதால், உறுப்பினர்களுக்கு குறிப்-பிட்ட நேரத்தில் வழங்க முடியாமல், பல தவணையாக தரும் நிலை உள்ளது. இதுகுறித்து முறையிட்டால் போதிய நிதி இல்லை என்று, மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் கூறுகின்-றனர். நகை கடன் நிறுத்தப்பட்டுள்ளதால், கூட்டுறவு சங்க வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 7ல் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண் இயக்குனர் மீராபாய் தலை-மையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் கால்நடை வளர்ப்பு கடன், பழைய, புதிய உறுப்பினர்கள் யாருக்கும் வழங்கக்கூடாது. பயிர்கடன் கூட பழைய உறுப்பினர்களுக்கு மட்டும், நிலுவை இல்லாமல் இருந்தால் பரிசீலித்து வழங்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் நகை கடனுடன், இனி கால்நடை வளர்ப்பு கடனும் கிடைக்காது. பயிர் கடனும் துரிதமாக பெற முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச்-செயலர் வைரப்பன் கூறியதாவது: கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சி வந்ததும், பயிர் கடன், நகை, மகளிர் சுய உதவி குழு என, 19,500 கோடி ரூபாய் தள்ளுபடி செய்து திருப்பி வழங்கியதில், 5,200 கோடி ரூபாய் இன்னும் நிலுவை வைத்துள்ளது. அத்துடன் நபார்டு வங்கி, 2023ல் பயிர் கடன் வழங்க, மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு, 4,500 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. அது, 2024ல், 2,500 கோடி யாக குறைந்துவிட்டது. இதனால் தமி-ழகத்தில் உள்ள, 23 மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் நிதி தட்டுப்-பாடு ஏற்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் கொடுக்க முடி-யாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்கள் அசோசி-யேஷன்(பேக்சியா) மாநில பொதுச்செயலர் திருநாவு குமரேசன் கூறுகையில், ''மத்திய கூட்டுறவு வங்கி காசுக்கடன் தராததால், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளிட்டவை ஸ்திரத்தன்-மையை இழந்துவருகின்றன. இதேநிலை நீடித்தால், தி.மு.க., ஆட்சி முடியும் முன், பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் மூடும் நிலை ஏற்படும்,'' என்றார்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் மீராதேவி கூறுகையில், ''கடன் இலக்கை அடைந்துவிட்டோம். அதனால் கேட்கும் அளவு தர முடியாது,'' என்றார்
- நமது நிருபர் -.