/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புயல் மழையால் அரளி உற்பத்தி சரிவு விவசாயி,தொழிலாளர்களுக்கு இழப்பு
/
புயல் மழையால் அரளி உற்பத்தி சரிவு விவசாயி,தொழிலாளர்களுக்கு இழப்பு
புயல் மழையால் அரளி உற்பத்தி சரிவு விவசாயி,தொழிலாளர்களுக்கு இழப்பு
புயல் மழையால் அரளி உற்பத்தி சரிவு விவசாயி,தொழிலாளர்களுக்கு இழப்பு
ADDED : டிச 03, 2024 06:58 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஏக்கரில் அரளி நடவு செய்-யப்பட்டுள்ளது.
தினமும் அதிகாலை செடியிலிருந்து அரளி மொக்கு பறித்து, ஒரு கிலோ வீதம்
பாக்கெட்டில் அடைத்து, தமி-ழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு
அனுப்பு-கின்றனர். அரளி வர்த்தகத்தை நம்பி, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி-லாளர்கள் உள்ளனர்.
செடியிலிருந்து ஒரு கிலோ மொக்கு பறிக்க, 50 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வெயில் இல்லாமல், குளிர் காற்று வீசுகிறது. இரவில்
பனிப்பொ-ழிவு உள்ளது. புயல் காரணமாக, தொடர் மழை பெய்து வருகி-றது.பருவ நிலை மாறியதால், அரளி உற்பத்தி அடியோடு சரிந்துள்-ளது. வெயில்
இல்லாததால், புதிய அரும்புகள் உற்பத்தியாக-வில்லை. செடியில் உள்ள சில
மொக்கு மழையால், உதிர்ந்து விடுகிறது. 10 கிலோ மகசூல் கிடைத்த வயலில், மூன்று
கிலோ மொக்கு மட்டுமே கிடைக்கிறது. புயல் மழையால், 70 சதவீதம் மகசூல்
பாதிக்கப்பட்டதால், விவசாயிகள், கூலி தொழிலாளர்க-ளுக்கு வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது.