/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் இடம் கேட்டு தெருவோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 03, 2024 06:56 AM
சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில் மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார்.மாவட்ட செயலர் ராஜேந்திரன் பேசியதாவது: ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டும்போது பிறகு இடம் தருவாக கூறி எங்களை அப்புறப்படுத்தினர். பஸ் ஸ்டாண்ட் கட்டி திறந்த பின் இடம் தர மறுக்கின்றனர். சீர்மிகு நகர திட்டத்தில் பெட்டிக்கடைக்கு ஏலம் விடுவதாக கூறினர். அதை அதிக பணம் செலுத்தி ஏலம் எடுக்க முடியாது என கூறியதும், ஏலம் முடிந்தபின் இடம் ஒதுக்குவதாக கூறியும் இதுவரை ஒதுக்கவில்லை. இருக்கிற இடத்தில் கடை வைத்துள்ள எங்களை, ஏலம் எடுத்த ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அப்புறப்படுத்தி மிரட்டி வருகின்றனர். அடையாள அட்டை வைத்துள்ள தெருவோர வியாபாரிகளுக்கு இடம் வழங்கிய பிறகு தான், பெட்டி கடைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து மாநகராட்சி, ஆளுங்கட்சி நிர்வாகிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.