'யுனிவர்சல்' பள்ளி மாணவர்கள் தயாரித்த ஓட்டு இயந்திரத்தில் மாணவர் தேர்தல்
'யுனிவர்சல்' பள்ளி மாணவர்கள் தயாரித்த ஓட்டு இயந்திரத்தில் மாணவர் தேர்தல்
ADDED : ஆக 07, 2026 05:09 AM
இடைப்பாடி:இடைப்பாடி,
கோணங்குட்டையூரில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,
ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல் நடைமுறையை
பிரதிபலிக்கும்படி, மாணவர் மன்றத்தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.
இதுகுறித்து அப்பள்ளி தாளாளர் சீனிவாசன் கூறியதாவது:
பள்ளி
நிர்வாகம் சார்பில் மாணவர் மன்ற தேர்தல் நடத்தப்பட்டது. 3 முதல்,
பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் ஓட்டுப்போட்டனர். முன்னதாக
போட்டியிட்ட வேட்பாளர்கள், 3 நாட்களாக, ஒவ்வொரு வகுப்பறையாக
சென்று, வாக்குறுதிகளை எடுத்துரைத்து பிரசாரம் செய்தனர்.
ஓட்டளிக்க,
பெயர், அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டு, கையொப்பம் பெறப்பட்டு
விரலில் மை வைத்த பின், மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் பள்ளி
மாணவர்கள் தயாரித்த மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஓட்டை பதிவு
செய்தனர். அது பதிவானதும், 'பீப்' ஒலி எழும்படி இயந்திரம்
வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் உண்மையான தேர்தலில்
ஓட்டளிக்கும் அனுபவத்தை, மாணவர்கள் பெற்றனர்.
இயந்திரங்கள்,
தேர்தல் நடைமுறைகள், மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும், 'அடல்
டிங்கரிங் லேப்' மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வக உதவியுடன், மாணவர்களால்
உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பள்ளி செயலர் சக்தி, இயக்குனர் சபரிதர்ஷன், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
