ADDED : ஆக 22, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
நங்கவள்ளி; நங்கவள்ளி, பெரிய சோரகையை சேர்ந்த டிரைவர் ரவிக்குமாரின், 2வது மகன் ஸ்ரீதர், 15. வனவாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று மதியம் பள்ளியில் உடற்பயிற்சி செய்யக்கூடிய கம்பியில் தொங்கியபடி விளையாடிக்கொண்டி-ருந்தார்.
அப்போது மயக்கம் ஏற்பட்டு விழுந்தார். ஆசிரி-யர்கள் மீட்டு, நங்கவள்ளி ஆரம்ப சுகாதார நிலை-யத்துக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது. நங்கவள்ளி போலீசார் விசாரிக்-கின்றனர்.
