ADDED : ஜூலை 09, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் : சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கியதை கண்டித்து, இண்டியா கூட்டணி கட்சி மாணவர்கள் அமைப்பு சார்பில், பல்கலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அகில இந்திய மாணவர் அமைப்பு மாநில செயலர் தினேஷ் தலைமை வகித்தார்.
ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பை ரத்து செய்யும் வரை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., மாணவரணி மாநில துணை செயலர் தமிழரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.