/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியர் வளையப்பந்து போட்டி; நெய்க்காரப்பட்டி அரசு பள்ளி அசத்தல்
/
மாணவியர் வளையப்பந்து போட்டி; நெய்க்காரப்பட்டி அரசு பள்ளி அசத்தல்
மாணவியர் வளையப்பந்து போட்டி; நெய்க்காரப்பட்டி அரசு பள்ளி அசத்தல்
மாணவியர் வளையப்பந்து போட்டி; நெய்க்காரப்பட்டி அரசு பள்ளி அசத்தல்
ADDED : ஆக 21, 2024 06:24 AM
வீரபாண்டி: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்டம் பனம-ரத்துப்பட்டி குறு மைய அளவில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில் நெய்க்காரப்பட்டி அரசு மேல்நி-லைப்பள்ளியில் நேற்று, மாணவியருக்கு, 14, 17, 19 வயதுக்குட்-பட்டோர் ஒற்றையர், இரட்டையர் வளையப்பந்து போட்டிகள் நடந்தன.
அதில் பனரமத்துப்பட்டி, மல்லுார், நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள், இளம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலை, பனமரத்துப்பட்டி அரசு மாதிரி என, 5 அணிகள் மோதின. 14 வய-துக்குட்ட ஒற்றையர், இரட்டையரில் பனமரத்துப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி முதலிடம் பிடித்தது. நெய்க்காரப்பட்டி, 2ம் இடம் பிடித்தது.அதேபோல், 17 வயது பிரிவில் ஒற்றையர், இரட்டையர் பிரிவு-களில் நெய்க்காரப்பட்டி முதலிடம், மல்லுார், 2ம் இடம் பிடித்-தது. 19 வயதில், இரு பிரிவுகளிலும் நெய்க்காரப்பட்டி முதலிடம், மல்லுார், 2ம் இடம் பிடித்தன.
நேற்று முன்தினம் மாணவர் வளையப்பந்து போட்டியில், 14, 17, 19 வயது பிரிவுகளில், ஒற்றையர், இரட்டையரில் அனைத்து போட்டிகளிலும் நெய்க்காரப்பட்டி அணி முதலிடம் பிடித்திருந்-தது.