ADDED : ஜூன் 26, 2026 02:47 AM

அ நிறம் | அளவு
சேலம்; சேலத்தில், 7வது சர்வதேச சிலம்ப போட்டி கடந்த 21ல் நடந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில் சேலத்தை சேர்ந்த கோபிகா, 12, தங்கப்ப-தக்கம் வென்றார். இவர் ஏற்கனவே தேசிய போட்-டியில் வெள்ளி பதக்கம் வென்றவர். அதேபோல் சிவமுருகன், 7, தங்கம் வென்றார். இவரும் தேசிய போட்டியில் வெண்கலம் வென்றவர்.அதேபோல் நித்யா, 14, மித்ரன், 11, வெள்ளி வென்றனர். இவர்கள் தேசிய போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். இவர்களை தவிர சேலத்தை சேர்ந்த, 14 மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்றனர்.
மொத்தத்தில் சேலம் மாணவர்கள், 2 தங்கம், 2 வெள்ளி, 14 வெண்கல பதக்கங்களை பெற்று அசத்தினர். இவர்களை, மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணி பாராட்டினார்.
