ADDED : டிச 17, 2025 07:40 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் முதலாண்டு நர்சிங் படிக்கிறார். இவருக்கும் தம்மம்பட்டியை சேர்ந்த வாலிபருக்கும், திருமணம் செய்வதற்கான ஏற்பாடு நடந்தது.
இதுகுறித்து சேலம் குழந்தைகள் நல குழுமத்துக்கு புகார் சென்ற நிலையில், அதன் அலுவலர்கள், மாணவியின் பெற்றோரிடம் விசாரித்து, திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மாணவியை மீட்டு, சேலம் குழந்தைகள் காப்பகத்-துக்கு அழைத்துச்சென்றனர். இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.
