தனியார் கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணா
தனியார் கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணா
ADDED : மார் 14, 2026 05:04 AM

ஆத்துார்: தனியார் கால்நடை மருத்துவ கல்லுாரி அமைக்க, மாணவ, மாண-வியர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வி.கூட்ரோட்டில், கால்-நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு இறுதியாண்டு படிக்கும் வினோத்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு மற்றும் தர்ணா போராட்டம், நேற்று நடந்தது.இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு கால்-நடை மருத்துவ கல்லுாரிகள் - 7 உள்ளன. ஆண்டுதோறும், 680 மருத்துவர்கள் உருவாகின்றனர். இதன்மூலம் அதிகளவில் கால்-நடை மருத்துவர்கள் உள்ளனர். அதனால் கால்நடை மருத்துவ கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி, கால்நடை மருத்துவ கல்லுாரி பட்டதாரிகள், மாணவர்கள் சார்பில், முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் புதிதாக தனியார் கால்நடை மருத்துவ கல்லுாரியை தொடங்குவது, வேலைவாய்ப்பு பிரச்னையை மேலும் மோச-மாக்கும். கால்நடை மருத்துவ சேவையை பாதுகாக்க, தமிழக அரசு, இக்கோரிக்கையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவர்களிடம், கல்லுாரி நிர்வாக பேராசிரியர்கள் பேச்சு நடத்-தினர். இதில் சமாதானம் அடைந்த மாணவர்கள், கல்லுாரி டீன் இளங்கோவிடம், கோரிக்கை மனு வழங்கினர்.
