பஸ் ஏற சாலை குறுக்கே ஓடும் மாணவ, மாணவியரால் ஆபத்து
பஸ் ஏற சாலை குறுக்கே ஓடும் மாணவ, மாணவியரால் ஆபத்து
ADDED : அக் 05, 2026 01:03 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், டவுன் பஞ்சாயத்து, கால்நடை மருந்தகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை, ஒரே பகுதியில் உள்ளன. அங்கு பள்ளி அருகே சேலம் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்கூடம் உள்ளது.
அப்பகுதியில், திப்பம்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லுாத்துப்பட்டி, திருமனுார், வாழப்பாடி, மங்களபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள், கால்நடை மருந்தகம் முன் நின்று, பயணி-யரை ஏற்றிச்செல்கின்றன. அங்கு பயணியர் நிற்க, அமர, நிழற்-கூடம் இல்லை.
இதனால் திம்பம்பட்டி, கம்மாளப்பட்டி தடத்தில் செல்லும் பஸ்-களில் ஏற, எதிர்புறம் உள்ள நிழற்கூடத்தில் பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் அமர்ந்துள்ளனர். அந்த வழித்தட பஸ் வரும்-போது, அதில் ஏற, அவசரமாக சாலை குறுக்கே ஓடி எதிர்புறம் செல்கின்றனர். அப்போது சாலையில் வேகமாக வரும் வாகனங்-களில் சிக்கி, உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. அதனால் திப்பம்-பட்டி, கம்மாளப்பட்டி வழித்தட பஸ்கள் நிற்குமிடத்தில், கால்-நடை மருந்தக வளாகம் முன் இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, மாணவ, மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தினர்.
