/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வீழ்ந்தாலும் சாய்ந்தாலும் தலைநிமிர்ந்து நிற்கும் சிந்தனையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்'
/
'வீழ்ந்தாலும் சாய்ந்தாலும் தலைநிமிர்ந்து நிற்கும் சிந்தனையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்'
'வீழ்ந்தாலும் சாய்ந்தாலும் தலைநிமிர்ந்து நிற்கும் சிந்தனையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்'
'வீழ்ந்தாலும் சாய்ந்தாலும் தலைநிமிர்ந்து நிற்கும் சிந்தனையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்'
ADDED : செப் 06, 2024 07:42 AM
ஓமலுார்: ''வீழ்ந்தாலும், சாய்ந்தாலும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பது போன்ற சமூக சிந்தனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்,'' என, மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார்.
சேலம் பெரியார் பல்கலையில் ஆசிரியர் தின விழா, விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை வகித்தார். அதில் சேலம் அரசு கலைக்கல்லுாரி இணை பேராசிரியர் கார்மேகம், நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரி இணை பேராசிரியை புவனேஸ்வரி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர் பிரகாஷ் சகாயலியோன் ஆகியோருக்கு, சிறந்த ஆசிரியர் விருதை, திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் வழங்கினார்.
தொடர்ந்து துணைவேந்தர் கிருஷ்ணன் பேசியதாவது: ஆசிரியர் - மாணவர் தொடர்பு என்பது மிக முக்கியம். ஏனெனில் மாணவர் இல்லையென்றால் ஆசிரியர் கிடையாது. மாணவர்களுக்கு கல்வி, பட்டம், வேலைவாய்ப்பு என்பதோடு ஆசிரியர் நில்லாமல் சமுதாயத்துக்கும் பங்களிப்பை அளிக்க வேண்டும். அந்தந்த ஊர் பாரம்பரியம், சிறப்புகளை மாணவரிடம் புகுத்தவேண்டும். தலையாட்டி பொம்மை எப்படி சாய்ந்தாலும் நிமிர்ந்து நிற்கும். அதுபோல் வீழ்ந்தாலும், சாய்ந்தாலும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பது போன்ற சமூக சிந்தனைகளை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன்(பொ), பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி, மேட்டூர் அரசு கலைக்கல்லுாரி சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.சேலம் கோட்டை அரசு மகளிர், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கலெக்டர் பிருந்தாதேவி, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர்களோடு, 'செல்பி' எடுத்துக்கொண்டார். அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அதில் ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் பூங்கொத்து, ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.