ADDED : செப் 29, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி விடுதியில், கடந்த, 24 இரவு, அமைப்பியல் மற்றும் மின்னியல் துறை மாணவர்கள், தொழிற்-சாலைகளை பார்வையிட புறப்பட தயாரான-போது பட்டாசு வெடித்துள்ளனர். பட்டாசு நெருப்பு பட்டதில்,
இரு துறை மாணவர்கள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. அதில் காயம் அடைந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சச்சின், 20, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகாரில், கருப்பூர் போலீசார், பிரவீன், தினேஷ் ஆகிய மாணவர்க-ளிடம் விசாரித்தனர். இந்நிலையில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களை, 'சஸ்பெண்ட்' செய்து, கல்லுாரி முதல்வர் கீதா உத்தரவிட்டார்.
