ADDED : செப் 29, 2025 01:50 AM
பனமரத்துப்பட்டி:சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருகே பனமரத்துப்பட்டி பிரிவு சாலை உள்ளது.
அங்கு சேலம், புதிய, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பஸ்கள் நின்று, பயணியரை ஏற்றிய பின், பனமரத்துப்பட்டி, ராசிபுரம், கம்மாளப்பட்டி, திருமனுார், ஜல்லுாத்துப்பட்டி, தம்மம்பட்டி, மங்களபுரம், வாழப்பாடி செல்கின்றன.பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் பயணியருக்கு நிழற்கூடம் இல்லை. அங்குள்ள புளிய மரத்தடியில் மக்கள் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். மழை வந்தால் தஞ்சமடைய இடம் இல்லை. முதியோர் அமர இருக்கை வசதி இல்லை. கால் கடுக்க காத்திருந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், ''பனமரத்துப்பட்டி பிரிவு சாலை மற்றும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் பயணியர் நிழற்கூடம் கட்ட, சேலம் எம்.பி., செல்வகணபதியிடம் நிதி வழங்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.