/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரியாற்றில் படகு இல்லம் அமைக்க ஆலோசனை
/
காவிரியாற்றில் படகு இல்லம் அமைக்க ஆலோசனை
ADDED : அக் 06, 2024 03:59 AM
மேட்டூர்: ''மேட்டூர் காவிரியாற்றில் படகு இல்லம் அமைக்க, சுற்றுலா கமிஷனரிடம் ஆலோசிக்கப்படும்,'' என, அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் எம்.ஜி.ஆர்., பாலம் அடிவாரம், கட்லா, ரோகு, மிர்கால், கல்பாஸ், சேல் கெண்டை என, 5 வகைகளில், 2 லட்சம் மீன்குஞ்சுகளை, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று, காவிரியாற்றில் விட்டார்.தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், ''இத்தொகுதி, எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று, மேட்டூர் காவிரியாற்றில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு சுற்றுலா துறை கமிஷனரிடம் பேசி, அவரை விரைவில் சேலம் மாவட்டத்துக்கு வரவழைத்து, ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.
பின் மேட்டூர் அணை பூங்காவை பார்வையிட்டார். சேலம் எம்.பி., செல்வகணபதி, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக அமைச்சரை, கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.