தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கோடைகால துாதுவர் திட்ட பயிற்சி இன்று தொடக்கம்

கோடைகால துாதுவர் திட்ட பயிற்சி இன்று தொடக்கம்

கோடைகால துாதுவர் திட்ட பயிற்சி இன்று தொடக்கம்


ADDED : மே 07, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மான், முதலை, குரங்கு, மயில்கள், மலைப்பாம்பு உள்பட, 300 விலங்-குகள் பராமரிக்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறையால், வனத்துறை சார்பில் விலங்குகள், காடுகள் பற்றி, மாணவர்கள் மற்றும் மக்கள் அறிய, 'கோடைகால துாதுவர்' திட்-டத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் கூறியதாவது:

கோடைகால துாதுவர் திட்ட பயிற்சியில் குரும்பப்பட்டி உயி-ரியல் பூங்காவை சுற்றியுள்ள வனத்துறை காப்புக்காட்டில், 5 கி.மீ., வரை

அழைத்துச்செல்லப்பட்டு மரங்கள், பறவைகள், விலங்குகள், வண்ணத்துப்பூச்சி ஆகியவற்றின் வாழ்க்கை முறை, பூங்காவின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்து பயிற்சி வழங்கப்படும். இதில், 3ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், மக்கள் இயற்கை ஆர்வலர்கள்

பங்கேற்கலாம்.

முதல்கட்ட பயிற்சி மே, 7ல்(இன்று) தொடங்குகிறது. வரும், 14, 21, 28, ஜூன், 4 என, 5 கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை, 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை பயிற்சி நடக்கும். இதில் பங்கேற்போருக்கு, துாதுவர் சான்றிதழ், தொப்பி, நோட்புக், பேனா, ஓராண்டில், 5 முறை உயிரியல் பூங்காவை சுற்-றிப்பார்க்க அனுமதி வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், 0427 - 2912197, 80563 90717 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 300 ரூபாய் கட்டணம் செலுத்தி

பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us