ADDED : மார் 24, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
ஏற்காடுஏற்காட்டில் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து நடத்திய, பள்ளி மாணவர்களுக்கு கோடை இயற்கை முகாம் வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஐந்து நாட்கள் நடைபெறும் முகாமில், முதலாம் நாளான நேற்று ஏற்காட்டில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளை சேர்ந்த, 60 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். மாணவர்களை வனத்துறை அலுவலர்கள் சன்னியாசி மலை பகுதியில் உள்ள, வனப்பகுதியில் ட்ரெக்கிங் அழைத்து சென்று வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் மற்றும் உயிரினங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து மாணவர்களிடம், மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
