/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க.,வுக்கு ஆதரவு எம்.எல்.ஏ., கோரிக்கை
/
தி.மு.க.,வுக்கு ஆதரவு எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 14, 2024 07:04 AM
ஓமலுார்: முதல்வர் ஸ்டாலின், 71வது பிறந்தநாளையொட்டி, தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்டம், ஓமலுார் கிழக்கு ஒன்றியம், தளபதி நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, ஓமலுாரில் நேற்று நடந்தது. தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.அதில் சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசியதாவது: மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி உயர்ந்தது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, ஜி.எஸ்.டி., நிதியை மற்ற மாநிலங்களை விட குறைவாக வழங்கினர். இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, அ.தி.மு.க., ஓட்டளித்துள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம். வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 1,400 பயனாளிகளுக்கு, இலவச தையல் மிஷின், மின் சலவை பெட்டி, சேலை, வேட்டி என, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்களை வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, ஒன்றிய செயலர்கள் ரமேஷ், செல்வகுமரன், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, நகர செயலர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

