UPDATED : நவ 15, 2026 02:45 AM
ADDED : நவ 15, 2026 01:06 AM

சேலம்: சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த, 10ல் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மாலை, 'சத்ரு சம்ஹார திரிசதி' யாகம் நடத்தப்பட்டு, சண்முகர் விதவித வாகனங்களில் வீதி உலா வருகிறார். இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கூட்டு திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. அதில், 36 முறை கந்தசஷ்டி கவச பாராயணத்தில், விரதம் இருக்கும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.மதியம், 3:00 மணிக்கு சண்முகர் சக்தி வேல் வாங்கும் நிகழ்வு, 4:00 மணிக்கு மேல், நான்கு மாட வீதிகளில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு மயில், சேவல் கொடியுடன் சுப்ர
மணியர் பட்டாபிேஷக கோலத்தில், வெள்ளை யானை வாகனத்தில்
திருவீதி உலா வருகிறார்.
பட்டைக்கோவில் பாவடி செங்குந்தர் கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் நேற்று காலை, 'வேல் மாறல்' பாராயணம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆத்துார், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் உற்சவர் பாலசுப்ரணியர், வள்ளி, தெய்வானை, விநாயக பெருமான், அங்குள்ள குளத்தில் தெப்பத்தேரில் வலம் வர செய்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.அதேபோல் சேலம் சுகவனேஸ்வரர், குகை அம்பலவாணர், ஊத்துமலை பாலசுப்ரமணியர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.
