/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனமரத்துப்பட்டியில் திட்டப்பணிகள் ஆய்வு
/
பனமரத்துப்பட்டியில் திட்டப்பணிகள் ஆய்வு
ADDED : அக் 18, 2024 07:21 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், பல்வேறு திட்டப்பணிகளை சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார்.
நிலவாரப்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணி, பஸ் ஸ்டாப்பில் கட்டப்படும் நிழற்கூடம், பள்ளித்தெருப்பட்டி ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை ஆகிய பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது சாலை தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, சந்தியூர் அங்கன்வாடி மைய கட்டடத்தையும் பார்வையிட்டார்.பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், கான்கிரீட் சாலை பணி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டடம், மல்லுார் டவுன் பஞ்சாயத்தின் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு, எரிவாயு தகன மேடை ஆகியவற்றை கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.
செயற்பொறியாளர் சேகர், ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், பி.டி.ஓ.,சுரேஷ், மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார், பனமரத்துப்பட்டி 9 வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார், டவுன் பஞ்சாயத்து தலைவர் பரமேஸ்வரி, கவுன்சிலர் பிரதீப், செயல் அலுவலர் ரேவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.