ADDED : செப் 26, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நாகியம்பட்டி, கோனேரிப்பட்டி எல்லை பகுதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் மலை அடிவாரத்தில் சில மாதங்களாக இரவில் சிலர் மண் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, உடனே கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர், ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி கூறுகையில், ''மண் கடத்தல் குறித்து தாசில்தார் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. அங்கு மண் கடத்தல் தவிர்க்க,
அறிவிப்பு பலகை, இரவில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

