/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லஞ்சம் வாங்கிய சர்வேயர் 'சஸ்பெண்ட்'
/
லஞ்சம் வாங்கிய சர்வேயர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 20, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துார், துலுக்கனுாரை சேர்ந்த, விவசாயி குமரேசன். இவரது நிலத்தை அளவீடு செய்து, தனி பட்டா வழங்குவதற்கு, ஆத்துார் தாலுகா சர்வேயர் ஜீவிதா, 32, உதவியாளர் கண்ணதாசன், 41, ஆகியோர், கடந்த, 17ல், ஆத்துார் தாலுகா அலுவலகத்தில், 10,000 ரூபாயை லஞ்சமாக பெற்றனர்.
அப்போது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சர்வேயர், உதவியாளரை கைது செய்தனர்.இந்நிலையில் சர்வேயர், உதவியாளரை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் நில அளவை உதவி இயக்குனர் கண்ணன், நேற்று உத்தரவிட்டார்.