sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடக்கம்

/

கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடக்கம்

கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடக்கம்

கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடக்கம்


ADDED : பிப் 08, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. மதியம் கொடிமரத்துக்கு சிறப்பு அபிேஷகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்தனர். இரவு, 8:00 மணிக்கு கோவில் பூசாரி கொடியேற்றி, திருவிழாவை தொடங்கிவைத்தார்.

கந்தசாமி, மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்த-ருளி திருவீதி உலா வந்தார். இனி

தினமும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடக்கிறது. வரும், 10ல் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு,

12:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 11 காலை சொர்க்-கவாசல் திறக்கப்பட்டு, சர்வ

அலங்காரத்தில் சுவாமி தேருக்கு எழுந்தருளல், மதியம், 3:00 மணிக்கு தேரோட்டம், இரவு, 8:00 மணிக்கு

சப்பரத்தில் திருவீதி உலா; 13 இரவு, 7:00 மணிக்கு சுவாமி மயில் வாகனத்திலும், மின் அலங்கார

சப்பரத்திலும், மலர் சப்பரத்திலும் திருவீதி உலா வருவார். 14ல் வசந்த உற்சவத்-துடன் விழா

நிறைவு பெறும். பஞ்சமூர்த்திஅதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி, 5ம் நாளான

நேற்று, குருக்குப்பட்டி கிராமம், கெண்டி கருப்பாயி நினைவாக, அவரது உறவினர்கள் சார்பில்

சுவாமிக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் கல்-யாண மண்டபத்தில் சுவாமிக்கு வாசனை

திரவியங்களால் அபி-ஷேகம் செய்து தீபாாரதனை காட்டப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு

சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி சுவாமிக்கு, பூக்களால் அலங்காரம் செய்து ரிஷப வாகனத்தில்

எழுந்தருள செய்தனர். அதேபோல் விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன் உள்பட பஞ்சமூர்த்திகள்

திருவீதி உலா தொடங்கி, முக்கிய வீதிகள் வழியே சென்று கோவிலில் நிறைவு செய்தனர். ஏராளமான

பக்-தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us