/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்கீல் வாரிசுதாரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி முதல்வருக்கு தமிழக பார் கவுன்சில் பாராட்டு

ADDED : நவ 14, 2024 07:44 AM
சேலம்: இறந்த வக்கீல்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, தமிழக வக்கீல் நல நிதியம் சார்பில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. அதில், 10 வக்கீல்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா, 10 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதில் சட்ட அமைச்சர் ரகுபதி, தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் பிரபாகரன், மாநில தலைவர்
அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், மூத்த வக்கீல் வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, முதல்வருக்கு நன்றி தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.இதுகுறித்து அய்யப்பமணி கூறியதாவது: வக்கீல் இறப்புக்கு பின் அவரது குடும்பத்தினருக்கு சேமநல நிதி, 7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், 10 லட்சமாக உயர்த்த, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில்
கோரிக்கை வைத்தோம். முதல்வர் அதை நிறைவேற்றி தந்ததோடு சேமநல நிதிக்கு, அரசின் மானியத்தையும், 8 கோடியில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார். முதல்கட்டமாக, 10 வக்கீல்களுக்கு, 10
லட்சம் ரூபாய் வீதம் நல நிதியாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நன்றி தெரிவித்ததோடு சேலத்தில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.